அதிரை அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மறைவு இலங்கைகே ஏற்பட்ட இழப்பு என ராஜபக்‌ஷே தெரிவித்துள்ளார்

img_6219அல் உஸ்தாத் எம்.ஏ.அப்துல்லாஹ் ரஹ்மானி ஹஸரத்தின் இழப்பானது இலங்கை முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, முழுநாட்டுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகவே நான் கருதுகிறேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இக்காலகட்டத்தில் சமாதானத்தை ஏற்படுத்தி, நல்வாழ்வை உறுதிப்படுத்தி,முஸ்லிம்களுடைய பங்களிப்பையும் நாட்டு நலனுக்காக வேண்டி பெற்றுத் தருவதற்கு இப்படியானதொரு மார்க்கப் பெரியார் எமக்கு அவசியம் தேவைப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் அவருடைய மறைவு குறித்து எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருக்கு நற்பாக்கியத்தை அளிக்க வேண்டும் எனவும் இறைவனை வேண்டுகிறேன் – என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Close