அதிரை அப்துல்லாஹ் ஆலிம் அவர்களை 5 ஆண்டுகளாக பராமரித்து வந்த இலங்கை மாணவர் இலவச உம்ரா பயணம் செல்ல ஏற்பாடு!

img_6240நம்மை விட்டு பிரிந்த, காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கலாசாலையின் அதிபருமான மர்ஹூம் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் (ரஹ்மானி) அவர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிவிடை செய்தமைக்கு மதிப்பளித்து கெளரவிக்கும் வகையில் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த அல்ஹாபிழ் மெளலவி நாசர் முஹம்மட் றிபாஸ் அவர்களுக்கு சிறிலங்கா ஹிறா பெளண்டேஷனினால் உம்றா பயணத்துக்கான ஆவணங்கள் இன்று (13.10.2016) வியாழக்கிழமை இரவு கையளிக்கப்பட்டது.

தனக்கு வழங்கப்படும் விடுமுறைகளைக்கூட பொருட்படுத்தாது மர்ஹூம் ஷெய்குல் பலாஹ் அவர்களுக்கான சகல பணிவிடைகளையும் செய்து கவணித்தமைக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே இறையோனின் புனித இல்லமான கஃபாவை தரிசித்து உம்றா செய்வதற்கான பாக்கியம் ஹிறா பெளண்டேஷனால் ஹாபிழ் றிபாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணங்களை சிறிலங்கா ஹிறா பெளண்டேஷனின் தலைவரும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி), பொறியியலாளர் ஹிறாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

உம்றா கடமைக்காக இன்னும் சில தினங்களில் அல் ஹாபிழ் நாசர் முஹம்மட் றிபாஸ் புனித மக்கா நகருக்கு பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Close