இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்க மத்திய அரசு முயற்சி-முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு

img_6246பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முனைவதன் மூலம் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.

இதில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஜவாஹிருல்லா, அரசியல் சாசனத்தின் வழிகாட்டிக் கொள்கையில் அரசு, கல்வியை இலவசமாக வழங்க வேண்டும், சம வேலைக்கு சம கூலி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ஆனால், அவற்றை அமல்படுத்தாமல், பொது சிவில் சட்டத்தை மட்டும் மத்திய அரசு கையில் எடுத்திருப்பது அதன் சிறுபான்மை விரோத போக்கை வெளிப்படுத்துவதாக குற்றம்சாட்டினர்.

மேலும், பொது சிவில் சட்ட விவகாரம் தொடர்பாக, அனைத்திந்திய முஸ்லீம் தனியார் சட்டவாரியம் மேற்கொள்ளும் அனைத்து வித நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

Close