Adirai pirai
posts

குவைத் நாடாளுமன்றம் கலைப்பு! நவம்பர் 26 தேர்தல்!

குவைத் நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினை அதிகரித்து வருவதால், உடனடியா தேர்தல் நடத்தப் ப்ட வேண்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் மார்சவுக் அல் கனேம் கூறியிருந்தார்.

இந் நிலையில், இளவரசர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக இளவரசர் அறிவித்தார்.

குவைத் அரசியலமைப்புப்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை ஆகும். எனவே வரும் நவம்பர் 26 ஆம் தேதி அங்கு தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

-கல்ப் நியூஸ்