உள்ளாட்சி தேர்தலுக்கான தடை தொடரும்! உயர்நீதிமன்றம் உத்தரவு!

உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவதற்கு போதிய அவகாசம் கொடுக்கவில்லை என திமுக தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அரசின் 3 அரசாணைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அவசர மனுவாக விசாரிக்க கோரிக்கை விடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், தேர்தல் ரத்துக்கு தடை விதிக்க மறுத்து, விசாரணையை ஒத்திவைத்தது.

தடை தொடரும்:

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்பின்னணி தராதவர்களின் வேட்புமனுவை நிராகரிக்க இயலாது. இட ஒதுக்கீட்டுக்காக வந்த வழக்கில், தேர்தலை ரத்து செய்தது செல்லாது எனக்கூறினார்.

தி.மு.க., சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் அறிவிப்பில் மாநில தேர்தல் ஆணையம் – தமிழக அரசு கூட்டு உள்ளது என கூறினார். இதனை மாநில தேர்தல் ஆணையம் மறுத்தது. இதனையடுத்து, இந்த வழக்கை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்த சென்னை ஐகோர்ட், தி.மு.க., மற்றும் தமிழக அரசு பதிலளிக்க நான்கு வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Close