அதிரையரின் ATM எண் கேட்டு தொடர்ந்து கால் செய்து வரும் மோசடி கும்பல்! எச்சரிக்கை!

Email

அதிரை காலியார் தெருவை சேர்ந்தவர் ஹுசைன். இவருக்கு இன்று மாலை 8757869823 என்ற எண்ணில் இருந்து இன்று மாலை அழைப்பு வந்துள்ளது. அதில் “நான் இந்தியன் வங்கி மேனேஜர் பேசுகிறேன், உங்களுக்கு ஏடிஎம் கார்டு லாக் ஆகவுள்ளது. உங்கள் ATM கார்டின் நம்பர் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை சொல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.

உடனே சுதாரித்துக்கொண்ட ஹுசைன் நீங்கள் யார்? நான் எதற்கு தரவேண்டும்? என்று அந்த மோசடி கும்பலிடம் கேட்க அவர்கள் சொன்னவற்றையே மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து இவர் அவர்களிடம் தரமுடியாது என்ற கூற அவர்களின் பேச்சு கனமாகவும் சற்றும் அதட்டும் வகையிலும் மாறியுள்ளது. இது குறித்து நம்மிடம் தகவல் தெரிவித்த ஹுசைன், தொலைபேசியில் பேசியவர் வட இந்தியரின் பாசையில் பேசினார் என்றார்.

இது போன்று கடந்த சில நாட்களாக அதிரை உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்தவர்கள் இது போன்ற மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.image-1-1

Close