அதிரையில் த.மு.மு.க வின் ஆர்ப்பாட்டத்திற்க்கு அலைகடலென திரண்ட மக்கள்

பாலஸ்தீன முஸ்லிம்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி பல முஸ்லிம்களையும் அப்பாவி குழந்தைகளையும் கொன்று குவித்துவரும் இஸ்ரேலிய தீவிரவாதிகளை கண்டித்து அதிரையில் இன்று மாலை 4:30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
அதிரை தக்வா பள்ளியில் அருகில் இருந்து பெரும் பேரணியாக சென்று பேருந்து நிலையம் அருகே கண்டன கோஷங்கள் முழங்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் ம.ம.க வின் மாநில தலைவர் தமீம் அன்சாரி அவர்களும் ம.ம.க வின் மாநில அமைப்பு செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா அவர்களும் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
இதில் ஏராளமான அதிரை இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் சமுக ஆர்வலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Advertisement

Close