அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டத்தில் முக்கிய தீர்மாணங்கள் நிறைவேற்றம்! (படங்கள் இணைப்பு)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 39 வது மாதாந்திர கூட்டம் கடந்த 14/10/2016 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சிரார். சாஜித் S/o மன்சூர் ( உறுப்பினர் )

முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )
சிறப்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )

நன்றியுரை : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )

தீர்மானங்கள்:
1) இந்த வருடம் ஹஜ் பெருநாளின் குர்பானி ( ஒழுகியா ) திட்டத்தை மிகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் நடத்தி ( ஏழை எளிய மக்களுக்கு ) உதவி வந்த அதிரை ABM H/O தலைமையகத்தை பாராட்டி ABM RIYADH கிளையின் சார்பாக நன்றியை தெரிவிப்பதோடு இன்ஷா அல்லாஹ் வரும் வருடம் ஊர் மக்கள் மேலும் ஆதரவு தந்து மேலும் செம்மையாக நடத்திட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

2) ABM தலைமையகம் நடத்தி வரும் ஆதரவற்ற பெண்ணின் பென்ஷன் திட்டத்திற்கு மேலும் உதவிடுமாறும் அதற்காக முழு ஒத்துழைப்பும் பொருளாதாரமும் தந்து செம்மைப்பட சிறப்பாக செயல்படுத்துவது சம்மதமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது

3) ABM ரியாத் சார்பாக மாதம் தோறும் சந்தாவை செலுத்த முடியாத உறுப்பினர்களும் அதிரை சகோதரர்களும் வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது 6-மாதம் ஒருமுறையோ செலுத்தி அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

4) ABM தலைமையகம் சார்பாக நடந்து வரும் தையல் பயிற்சியை மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்கிவரும் இந்த சிறப்பான தையல் கலையை நமதூர் பெண்கள் பயன் பெற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) ரியாத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் கீழத்தெருவை சேர்ந்த சகோதரர் இப்ராகிம் நிஜாம் அவர்களுக்கு கடந்த ( 09-10-2016 ) அன்று OBEID ஆஸ்பத்திரியில் இருதய ஆப்ரேஷன் முழு வெற்றிகரமாக நடந்து இப்பொழுது நலமாக உள்ளார். அவர்கள் பூரண குணமடைய துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் NOVEMBER 11-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு \ ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

… ஜஸாகல்லாஹ் ஹைர்…

img_6450 img_6451 img_6452 img_6453 img_6454

Close