மமக தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு கொலை மிரட்டல்

img_6461திருவாரூர் அருகே மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் சென்ற காரை 2 மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.

அவர்களின் மோட்டார் சைக்கிளில் இரும்பு ராடு இருந்துள்ளது. மேலும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தவாறு சென்றுள்ளனர்.

இதுப்பற்றி திருவாரூர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜவாஹிருல்லாஹ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ்வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.img_6459

Close