அதிரை தக்வா பள்ளி புதிய மார்க்கெட் பணி குறித்த தவறான செய்திக்கு அதிரை பிறை வருந்துகிறது!!!

அதிரை தக்வா பள்ளி புதிய கட்டுமானப்பணி கடந்த வருடம் துவங்கியது. இதற்க்காக அதிரை தக்வா பள்ளி மைய வாடிக்கு பின் புறம் அமைந்துள்ள இடத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டது.

பரபரப்பாக வேலைகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்த வேலையில் 3 மாதங்களில் வேலைகள் திடீரென தடைப்பட்டது.

இது குறித்து 4 மாதங்களுக்கு முன்னர் தக்வா பள்ளி தலைவர் அப்துல் ஷுக்கூர் அவர்களிடம் விளக்கம் கேட்டு பேட்டி எடுக்கப்பட்டு அதிரை பிறையில் வீடியோவாக பதிந்திந்திருந்தோம். இதில் அவர் கூறியதில் கட்டுமானப் பணி நடைபெறும் இடம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று கூறினார்.இது முற்றிலும் தவறான தகவல் .

இது ஒரு புறம் இருக்க கடந்த 15 நாட்களுக்கு முன்னர் புதிய மார்க்கெட் கட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என தக்வா பள்ளி தலைவர் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அதிரை பிறையிலும் மற்றுமொரு அதிரை இணையதளத்திலும் இச்செய்தி முதல் தகவல் (ஆதாரமற்ற தகவலாக) பதியப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான நீதிமன்றத்தில் இருந்து தடை ஆணை நீக்கி ,தமிழ்நாடு வக்பு வாரியம் நிறுத்தி வைத்த கட்டிட பணிகளை துவங்க அனுமதி அளித்து உள்ளதாக தகவல் சொன்னார் .இதன் அடிப்படையில் தகவலை வெளியிட்டோம்  இது சம்மந்தமாக பலரிடம் இருந்து விமர்சனம் கிடைக்க பெற்றது .

ஒரு நீதி மன்றத்தின் வழக்கிற்கு அதற்கு என தனியாக எண் ஒன்று உள்ளது .இதை துலுக்கா பள்ளி தலைவரிடம்  அந்த வழக்கு உடைய எண் ,மற்றும் வக்பு வாரியம் அளித்த நகலையும் பல முறை நாங்கள் கேட்டும் வழங்காததால் அதிரை பிறை நிர்வாகம் இத் தகவலை பொய்யான தகவல் என்று அறியப்பட்டதால் முன்பு வெளியிட்ட தவறான  செய்தியை தந்தமைக்கு  அதிரை பிறை வருந்துகிறது.

இது சம்மந்தமாக தனிப்பட்ட அல்லது ஒரு குழுவாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம் .அப்படி வழக்கு இருக்குமாயின் அதிரை பிறைக்கு அந்த வழக்கின் எண் தர வேண்டும் என கேட்டுகொள்கிறோம் . 

Advertisement

Close