அதிரையே எழுச்சியுடன் திரண்டு கலந்துகொண்ட பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு (படங்கள் இணைப்பு)

முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தை நீக்கி விட்டு பொதுசிவில் சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்ற இஸ்லாமிய விரோத நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. முஸ்லிம்களின் உயிரினும் மேலான ஷரீஅத் சட்டங்களை, இந்தியாவில் பாதுகாப்பது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று 21-10-2016 (வெள்ளிக்கிழமை) மஹ்ரிப் தொழுகைக்கு பின் தக்வா பள்ளி அருகில் உலமாக்களால் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார அளவில் மார்க்க பொதுக்கூட்டம் மிகச்சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. இதில் மக்கா மஸ்ஜித் இமாம் ஷம்சுத்தின் காஷிமி அவர்கள் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார்கள். இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 1000த்திற்க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.img_6495img_6488 img_6489 img_6492

Close