நம்ம ஊருக்கு விரைவில் ரயில் வர போவுதுங்க!!!

அதிரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே திட்டம் பணிகள் துவங்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மந்தமான நிலையில் நடந்து வருகின்றன. இது குறித்து பல கோரிக்கைகள், பல்வேறு புகார் மனுக்கள், பலவிதமான ஆர்ப்பாட்டங்கள் என நமதூர் மக்கள் நடத்தினால் இந்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் தற்பொழுது இந்த ரயில்வே திட்டத்தை கொண்டு வந்தே ஆகவேண்டும் என்று உறுதி கொண்ட சமுக ஆர்வலர்கள் இதற்கான பல்வேறு முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அதன் விளைவாக இந்த ரயில்வே பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டையில் ரயில்வே பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றுக்கொண்டு வருகிறது என்றும் அடுத்த ஆண்டுக்குள் இதற்கான பணிகள் முடிவடையககூடும் என இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சமுக ஆர்வலர் முத்துப்பேட்டை சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

14650527_547216898802797_6494229806285688013_n 14702450_547216852136135_9161817011469085922_n 14639761_547216798802807_969592734906224019_n 14716111_547216755469478_3511896093775674717_n 14724351_547216645469489_2748954266321985910_n

Close