முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்கள் பொய் வழக்கில் இருந்து விடுவிப்பு

முத்துப்பேட்டை அனைத்துபள்ளிவாசல் தலைவர்கள், தமுமுக,sdpi நிர்வாகிகள் பொய்வழக்கில் இருந்து விடுதலை.

கடந்த ஆண்டு முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி திடலில் ஷரியத் விளக்கபொதுக்கூட்டம் நடைப்பெற்றது இந்த பொதுக்கூட்டத்திற்கு முதலில் காவல்துறை அனுமதி வழங்கியது.

பொதுக்கூட்டத்திற்கும் முதல் நாள் திடிர்என காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முத்துப்பேட்டை அனைத்து ஜமாத்தினர்ரகளையும்,தமுமுக,மமக மற்றும் sdpi கட்சினர்களை அனுகினார்கள். அதன் அடிப்படையில் ஆலோசனைக்கூட்டம் தெற்குதெரு அரபிசாகிப் பள்ளிவாசலில் நடைப்பெற்றது. அதன் அடிப்படையில் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

முத்துப்பேட்டை காவல்துறை முத்துப்பேட்டை அனைத்து பள்ளிவாசல் தலைவர்கள் தமுமுக நகர செயலாளர் சம்சூதின் மற்றும் sdpi மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் ஆகியோர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

மேற்படி வழக்கினை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தீன் முகம்மது, மூத்த வழக்கறிஞர் செல்வரெத்தினம் அவர்களும் ஆஜராகி வழக்கு நடத்திவந்தார்கள். மேற்படி வழக்கில் இன்று அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் எல்லாபுகழும் இறைவனுக்கே!img_6608img_6607

Close