காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளராக முத்துப்பேட்டை ஷேக் பரீத் நியமனம்!

14713677_1471641939529104_1943121920425363642_nஷேக் பரீத்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர் ஜே.ஷேக் பரீத். இவர் தற்பொழுது சென்னையில் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஜே.ஷேக் பரீத்தை தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பரிந்துரையின் பேரில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி, சிறுபான்மை பிரிவு அகில இந்திய தலைவர் குர்ஷித் அகமத் சையத் ஆகியோரின் ஒப்புதல் பெற்று காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் வழக்கறிஞர் அஸ்லம் பாஷா நியமனம் செய்துள்ளார்.

நியமனம் செய்யப்பட்ட ஷேக் பரீத், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மாநில தலைவர் வழக்கறிஞர் அஸ்லம் பாஷா உட்பட நிர்வாகிகளையும் மற்றும் முத்துப்பேட்டை பகுதி காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பலரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Close