அதிரை லயன்ஸ் சங்கம் நடத்திய விருது வழங்குவது, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

அதிரை லயன்ஸ் சங்கம் சார்பாக இன்று இரவு 7 மணியளவில் நமதூர் லாவண்யா மண்டபத்தில் சாதனையாளர்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் அதிரை சேக்கன்னா நிஜாம் அவர்களுக்கு சிறந்த பத்திரிக்கையாளருக்கான விருது, அதிரை ஆரிப் என்ற இளைஞருக்கு இலவச பிரேத குளிர்சாதன பெட்டி வழங்கி சேவையாற்றியதற்க்கான விருது, அதிரை த.மு.மு.க ஆம்புலன்ஸின் ஒப்பற்ற சேவையை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரை அளவில் சாதனை புரிந்த மாணவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து அதிரை லயன்ஸ் சங்க தலைவர் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களின் விபரம் பின்வருமாறு…
தலைவர்: சாகுல் ஹமீது
 செயலாளர்: அல்ஹாஜ் 
செயலர்: நெய்னா முகம்மது
பொருளாளர்: ஆறுமுகசாமி 
உடனடி முன்னால் தலைவர்: அகமது
முதல் துணைத்தலைவர்: ராமமூர்த்தி 
இரண்டாம் துணைத்தலைவர்: ஜகபர் அலி
மூன்றாம் துணைத்தலைவர்: பிச்சைமுத்து 
இன்னும் பலர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதற்கு முன்னதாக இப்தார் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான அதிரையர்கள் கலந்துக்கொண்டனர்.

Advertisement

Close