அதிரை காதிர் முகைதீன் பள்ளிகளுக்கு வந்த அரசின் இலவச சைக்கிள்கள்

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுவது வழக்கம். 
அந்த வகையில் இந்த வருடமும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் அந்தந்த பள்ளிகளுக்கு வந்துள்ளன.
அதிரையை பொருத்தவரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி மற்றும்  காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி மாணவ மாணவிகள் இதில் பயனடைகின்றனர்.
நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 183 மாணவர்களுக்கு தேவையான சைக்கில் உதிரி பாகங்களாக கொண்டுவரப்பட்டு கோர்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இது குறித்து காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி தலைமையாசிரியர் ஜனாப்.மஹ்பூப் அலி அவர்கள் நம்மிடம் கூறுகையில் “பள்ளியில் பயிலும் 183 மாணவர்களுக்கு தேவையான சைக்கில்களும் தயார் நிலையில் உள்ளன. இன்னும் சில தினங்களுக்குள் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் விநியோகிக்கப்படும்” என்றார்.  

Advertisement

Close