கட்டிய மனைவியை கைவிட்ட மோடி முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பற்றி பேச தகுதி இல்லை! திக் விஜஸ் சிங் நறுக்!

பாட்னா : கட்டிய மனைவியை கைவிட்டு விட்ட பிரதமர் மோடி, முஸ்லீம் பெண்களின் உரிமைகள் குறித்து பேசுவது விந்தையானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறினார். யோகா குரு ராம்தேவ் பற்றி அவதூறாக பேசியதாக காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் மீது, பீகார் மாநிலம் வைஷாலி மாவட்ட நீதிமன்றத்தில் பாஜ மாவட்டத் தலைவர் அஜித் குமார் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2012ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணைக்கு திக்விஜய்சிங் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி சஞ்சய் குமார் உத்தரவிட்டார்.

இதன்பின், நீதிமன்றத்துக்கு வெளிேய திக்விஜய்சிங் நிருபர்களிடம் கூறுகையில் ‘‘பிரதமர் மோடியும், பாஜவினரும் தற்போது பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக முஸ்லிம் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். தலாக் முறை பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். கட்டிய மனைவியை கைவிட்டவர், முஸ்லிம் பெண்களின் உரிமைகள் குறித்து பேசுவது விந்தையானது’’ என்றார்.

Close