நம்ம தஞ்சை மாவட்டத்துக்கு பிரபல எய்ம்ஸ் மருத்துத்துவமனை வர வாய்ப்பு!

img_6692தமிழகத்தில், தஞ்சை செங்கிப்பட்டியில், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் உள்ளதால், முறையான அறிவிப்பு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாநில அரசுக்கு கடிதம்

‘டில்லியில் உள்ள, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை யின் கிளை, தமிழகத்தில் அமைக்கப்படும்’ என, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, ‘ஒரே பகுதியில், 200 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து கொடுங்கள்’ என, மாநில அரசுக்கு கடிதம்

எழுதியது.

தமிழக அரசும், முழு வீச்சில் களமிறங்கி, மதுரை – தோப்பூர்; ஈரோடு – பெருந்துறை; காஞ்சிபுரம் – செங்கல்பட்டு; தஞ்சை – செங்கிப்பட்டி; புதுக்கோட்டை என, ஐந்து இடங்களில், தலா, 200 ஏக்கர் நிலம் தேர்வு செய்து, அது பற்றிய விபரத்தை, மத்திய அரசுக்கு அனுப்பியது.

பின், மத்திய சுகாதார துறை இணைச் செயலர், தாய்த்ரி பாண்டா தலைமையில், ஐவர் குழு, 2015 ஏப்ரலில், தமிழகம் வந்தது. இரு நாட்கள் தங்கி, ஐந்து இடங்களையும் ஆய்வு செய்து, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இதனால், எந்த இடத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என, தமிழக மக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால், மத்திய குழு ஆய்வு முடிந்து, ஒன்றரை ஆண்டுகளாகியும், இது குறித்த அறிவிப்பு வெளியாகாதது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Close