அதிரை மேலத்தெருவில் குவியும் குப்பைகள்! குமுறும் மக்கள்! செயல்படுவாரா செயல் அலுவலர்?

img_6719அதிரை பேரூராட்சி உட்பட்ட 16 மற்றும் 17 வது வார்டுகளின் கடந்த சில நாட்களாக கொட்டப்பட்டு வரும் குப்பை மற்றும் கழிவுகளை அப்பறப்படுத்தாதால் பொது மக்கள் கடந்து செல்லும் வழிகளில் பெரும் துர் நாற்றம் வீசி வருவகிறது. சுகாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்க்கு பெரும் அச்சுருத்தலாக இருந்து வருகிறது. இந்த குப்பையில் இருந்து பாலித்தீன் பைகள் உள்பட குப்பை பொருட்கள் காற்றில் பறந்து சுகாதாரமற்ற காற்றினை பொது மக்கள் சுவாசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுயுள்ளனர்.

இதனால் பகுதியில் பல்வேறு நோய்களால் குழந்தைகளும், பெரியவர்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது சம்மந்தப்பட்ட துறை சார்ந்த நிர்வாகிகள் உடனடியாக இந்த குப்பைகளை அப்புறப்படுத்தி பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கேட்டுகொண்டுள்ளனர்.

img_6716 img_6717 img_6718

Close