Adirai pirai
posts

சென்னை மண்ணடி ஸ்டேட் பேங்கில் தீ விபத்து


சென்னை மண்ணடியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில்  பயங்கர தீ விபத்து
ஏற்பட்டுள்ளது. ஸ்டேட் வங்கியில் பயங்கர தீ விபத்தால்  பாரிமுனையில் உள்ள
கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. 7  தீணைப்பு வாகனங்கள் தீயை
அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.  கரும்புகையுடன் தீப்பற்றி எரிவதால்
பாரிமுனை புகை மண்டலமாக மாறியது.  வங்கியின் 2வது தளத்தில் ஏற்பட்ட தீயை
அணைக்கும் பணியில் வீரர்கள்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வங்கியின் 2வது
தளத்தில் மின்கசிவு காரணமாக  தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது.

பற்றி
எறியும் தீயில் கணிப்பொறி மற்றும் மின்சாதனங்கள் வெடித்து சிதறின.
பாரிமுனையில் உள்ள பாரம்பரிய கட்டிடத்தில் பாரத ஸ்டேட் வங்கி இயங்கி
வருகிறது. தீ விபத்தால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டுள்ளது. 

புகைப்படம்: இர்பான் தீன்

Advertisement