அமீரகத்தில் நடைபெற்ற அதிரை TIYA வின் ஆலோசனைக் கூட்டம்! (படங்கள் இணைப்பு)

அமீரக TIYA வின் பொதுக்குழு கூட்டம் சகோ. சேக்காதி அவர்கள் ரூமில் 28.10.2016 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு TIYA வின் தலைவர் S.P.ஹாஜா முகைதீன் அவர்கள் முன்னிலையில் அமீரகம் வாழும் நமது முஹல்லாவை சார்ந்த மூத்த சகோ. காதர் முகைதீன் காக்கா அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் முஹல்லா வாசிகள் முன்னிலையில் கூட்டம் தொடங்கப்பட்டது. முன்னதாக நமது முஹல்லாவை சார்ந்த சகோ. சரபுதீன் அவர்கள் கிராஅத் ஓதினார்.

அமீரக தலைவர் சகோ. S.P. ஹாஜா அவர்கள் சிறப்பு அழைப்பாளர் சகோ. காதர் முகைதீன் காக்கா மற்றும் முஹல்லா வாசிகள் அனைவரையும் வரவேற்று அமர்ந்தார்.

அதனை தொடர்ந்து அமீரக TIYA வின் செயலாளர் சகோ. S.M. சேக் அவர்கள் 1.1.2016 அன்று முதல் இன்று வரை செய்த செயல்பாடுகள், மற்றும் இனி செய்ய இருக்கும் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து அமீரக TIYAவின் பொருளாளர் சகோ. S. நவாஸ் அவர்கள் வரவு செலவு கணக்குகளை மிக தெளிவாக உறுப்பினர்கள் அனைவர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தார்.

இதனை தொடர்ந்து TIYAவின் உறுப்பினர்களிடம் இது வரை செய்து உள்ள செயல்பாடுகள் மற்றும் இனி செய்ய இருக்கும் செயல்பாடுகள் போன்ற விசயங்கள் குறித்து உறுப்பினர்கள் மத்தியில் பல விவாதங்கள் நடத்தப்பட்டு நமது மஹல்லாவாசிகள் நலன் கருதி நல்ல பல விசயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

மேற்கண்ட நிகழ்வுடன் அமீரக TIYAவின் பொதுக்குழு கூட்டம் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு துஆவுடன் இனிதே நிறைவுற்றது.

img_6793 img_6794 img_6795 img_6796 img_6797 img_6798என்றும் அன்புடன்
அமீரக TIYA
தலைவர் மற்றும் நிர்வாகிகள்

Close