அதிரை கடல்பகுதியில் செயற்கை பவளபாறைகள் அமைக்க கோரிக்கை!

அதிராம்பட்டினத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர். சிலர் இரட்டை மடி வலைஇழுக்கின்றனர். அதனால் இயற்கை பவள பாறைகள் பாதிப்பு அடைக்கின்றன. எனவே தஞ்சை கடல் பகுதியில் மீன் உற்பத்தி அதிகரிக்க செயற்கை பவள பாறைகளை அமைக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவ தொழிற்சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் காளிதாஸ் மீன்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

Close