அதிராம்பட்டினம் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப திறன் உருவாக்கும் பயிற்சி

     

        
   அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் தொழில்நுட்பத்துறைக்கு தேவையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை உருவாக்குவதற்கான பயிற்சி முகாம் 3 நாட்கள் நடந்தது. 
      முகாமை கல்லூரி புல முதல்வர் முனைவர் செந்தில்நாதன் துவக்கி வைத்தார். இதில் 150 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முகாமில் மாணவர்களுக்கு நுண்ணறிவுத்திறன், தொடர்பு திறன், கலந்துரையாடல், பொதுஅறிவு தலைமை பண்பு, முடிவெடுத்தல், சுயதொழில் முனைதல் மற்றும் சிறுதொழில் துவங்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை இளையோர் கட்டமைப்பு, வங்கித்துறை, மாவட்ட தொழில் நிறுவனம் மற்றும் தொலைத்தொடர்பு துறை ஆகியவற்றிலிருந்து பல்வேறு நிபுணர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். மாணவர்களுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழரசன் சான்றிதழ் வழங்கினார். ஏற்பாடுகளை பேராசிரியர் செந்தில்குமார் மற்றும் முனைவர் பரந்தாமன் செய்தனர்.

Advertisement

Close