அதிரை கீழத்தெரு பகுதியில் டெங்கு, சிக்குன்குனியா நோய்கள் பரவும் அபாயம்!

img_7149-1.jpg

அதிரை கீழத்தெரு 15வது வார்டுக்கு உட்பட்ட செய்னா குளத்து ஓரத்தில் உள்ள பகுதியில் தொடர்ந்து மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றன. இதன் காரணமாக லட்சக்கணக்கான ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட செய்னா குளம் பெரிதும் மாசடைந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த குப்பைகளால் அப்பகுதியை கடந்த செல்லும் போது துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் இங்கு அதிகம் உற்பத்தியாவதால் இங்கு டெங்கு, சிக்கன்குனியா போன்ற கொடிய நோய்கள் பரவும் அச்சம் நிலவி வருகிறது.

img_7154.jpg img_7161.jpgimg_7154.jpg

Close