அதிரை, பட்டுக்கோட்டை, தஞ்சை சுற்றுவட்டார மக்களுக்கு ஒரு எச்சரிக்கை!

வரும் நவம்பர் 19 ஆம் தேதி தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இதன் சுற்று வட்டார பகுதிகள் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டுக்கோட்டை புறவழிச் சாலையில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்டதால் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே அதிரை, பட்டுக்கோட்டை, தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் சட்டவிதிகள் அமலில் உள்ளவரை தங்கள் பணத்தை உரிய ஆவனங்களுடன் கொண்டு செல்லவும்.

Close