அதிரை மக்களே நாமும் இது போன்று செய்யலாமே!

திருப்பூர், காங்கயம் ரோடு, வேலன் ஓட்டல் எதிரில், ‘புட் எக்ஸ்பிரஸ்’ ஓட்டல் முன் பகுதியில், உணவு வங்கி திறக்கப்பட்டுள்ளது. இதை ஏற்பாடு செய்த, கவிதா ஜனார்த்தனன் கூறியதாவது: திருப்பூர் நகரில் பல பகுதிகளிலும், ஆதரவற்ற முதியோர், குடும்பத்தாரால் கைவிடப்பட்டோர், உழைத்து உண்பதற்கு முடியாத நிலையில் பலர் உள்ளனர். வயிற்றுக்கு உணவுக்காக பலரிடமும் கையேந்தியும், பசியாற முடியாமல் தவிக்கும் இது போன்றோருக்காக இங்கு தினமும் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். தினமும், மதியம் 12:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை, பழம், பிஸ்கெட், ரொட்டி, சாத வகை, குடிநீர் பாட்டில் என தேவையான உணவு வகைகள் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கும். தேவைப்படுவோர், தாங்கள் விரும்பும் உணவு வகையினை எடுத்து உண்டு பசியாறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Close