அதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி!

அதிராம்பட்டினம் தஞ்சை மாவட்டத்தின் முக்கியமான கடலோர நகரமாக பொருளாதார அளவில் ஓரளவு செழிப்பான நகரமாகவும், மதநல்லிணக்கத்தின் அடிப்படையில் பிற ஊர்களுக்கு எடுத்துக்காட்டாக, இந்து, முஸ்லிம், கிருஸ்தவர்கள் ஒன்றோடு ஒன்று பின்னி பினைந்து சகோதரர்களாக, மாமன் மச்சான்களாக காலம் காலமாக வாழ்ந்து வரும் ஒரு நகரமாகும். இந்த ஊருக்கு முற்காலத்தில் செல்லிநகர் என்ற பெயரும் பின்னர் அப்பெயர் அதிராபியாபட்டினம் என்று மாற்றப்பட்டு காலப்போக்கில் அப்பெயர் தழுவி அதிராம்பட்டினம் என்று வந்தது.

ஆனால் அதிவீரராமபாண்டியன் என்ற மன்னன் ஆண்டதால் இந்த ஊருக்கு அதிராமபட்டினம் என்று பெயர் வந்ததால் ஒரு பொய்யான வரலாறு திணிக்கப்பட்டு பலரும் அதையே நம்பி வருகிறோம். இந்த அதிவீரராமபாண்டியன் என்ற மன்னர் கி.பி.1564 1606 கால கட்டத்தில் திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு ஒரு குறுகிய நலப்பரப்பை விசய நகரத்தின் பிரதிநிதியாய் மட்டும் ஆண்டு வந்தனர். வெறும் கவுரவ பதவிகளில் இருந்த இவர் எந்த ஒரு நாட்டையு கைப்பற்றியதாக சரித்திரத்தில் இல்லை. இந்த நிலையில் நெடுந்தொலைவில் உள்ள அதிராபியா பட்டினத்தை எப்படி கைப்பற்ற முடியும்.

இப்படி இருக்க அரசாங்க பதிவேடுகளில் அதிராம்பட்டினம் என்று இருக்கும் நிலையில் இதனை சுருக்கமாக அதிரை என்று நாம் அழைத்து வருகிறோம். ஆனால் ஒரு சிலர் இந்த பெயர் மதத்தின் அடிப்படையில் வேறுபாடு காட்டுவதை போன்று நமதூரின் பெயரை அதிவீரராமபட்டினம் என்றும், அதிராமபட்டினம் என்றும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வேலைகளில் எல்லாம் பதிந்து வருகிறார்கள். மதநல்லிணக்கம் தலைதோங்கும் எங்கள் அதிரையில் எந்த விதத்திலும் மதவேறுபாட்டை ஏற்படுத்த முடியாது.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

reference: Adirai History

Close