Adirai pirai
islam posts இந்தியா

தமிழகத்திற்கு காவிரி நீர் தந்த திப்பு சுல்தான்!

திப்பு சுல்தான் வீரமரணம் அடைந்து ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில், அதாவது 1806ஆம் ஆண்டில் காவிரி நீரை மைசூர் இராஜ்ஜியமே முன்வந்து மதராஸ் மாகாணத்திற்கு தர மறுக்கிறது. அதனையொட்டி காவிரி நீருக்காக இரு மாகாணங்களுக்கு இடையே முதல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் திப்பு சுல்தான் மைசூரை ஆண்ட காலம்வரை காவிரி நீரை அரசே முன்னின்று தடுத்த நிகழ்வோ, மதராஸ் இராஜியத்திற்கு ஒப்பந்தம்போட்டு நீர் வழங்கிய சம்பவங்களோ எதுவுமே நடைபெறவில்லை.

திப்பு மைசூரை ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில், அங்கிருந்த ஆளுநர் ஒருவர் காவிரி நீரை கீழ்பவானிக்கு செல்லவிடாமல் தடுப்பணை ஒன்றைக் கட்டுகிறார். அப்போது கீழ்பவானி விவசாயிகள் திப்புவைச் சந்தித்து முறையிடுகின்றனர்.

கீழ்பவானி விவசாயிகளின் புகாரைக் கேட்ட மைசூர் இராஜியத்தின் மன்னரான திப்பு “சூரியனும் சந்திரனும் உள்ளவரை மேலிருந்து கீழ்நோக்கிப் பாயும் நீரைத் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. தடுப்பணைகளை உடைத்தெறிந்து நீரை ஓடவிடுங்கள்” என அதே இடத்தில் நின்றுகொண்டு அதிரடி உத்தரவினைப் பிறப்பித்தார். மாறாக அவர் ஒப்பந்தத்தையோ, பேச்சுவார்த்தையையோ நடத்திக் கொண்டிருக்கவில்லை.

இன்று கீழ்பவானிக்காரர்களுக்கான (தமிழர்கள்) காவிரி நீரை தர மறுக்கும் மைசூர் இராஜியத்திற்கு (கர்நாடகம்) திப்புவின் உலக நியதியின் அடிப்படையிலான தீர்ப்பு நிச்சயம் எரிச்சலையே தரும். திப்புவின் நடுநிலைத் தீர்ப்புடைய எதிர்ப்பின் பரிணாமம்தான், இப்போதைய கர்நாடக உயர்நீதிமன்றத்தின் திப்பு குறித்த தீர்ப்பு என்றே கருதுகிறேன்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy