முத்துப்பேட்டையில் தமுமுகவினர் பேரூராட்சி முற்றுகை !!

இன்று (07.07.2014) காலை 10.30 மணியளவில் முத்துப்பேட்டை பேரூராட்சி முன்பு ரமலான் மாதத்தில் மக்களுக்கு குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமுமுக சார்பில் முற்றுகை
நடைப்பெற்றது.
இதில் தமுமுக நகர தலைவர் எம்.நெய்னா முகம்மது தலைமையில், ம.ம.க நகர செயலாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது, மாவட்ட துணை செயலாளர் முகம்மது அலீம், நகர பொருளாளர் தாவுதுஷா, நகர துணை தலைவர் முஹம்மது யாசீன், கத்தார் பொருப்பாளர் முஹம்மது ஹாமீம், மாணவரணி மாவட்ட செயலாளர் பைசல் உள்ளிட்ட நிர்வாகிகள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதை அடுத்து அனைவரும் களைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
தகவல்:முத்துபேட்டை பைசல்(திருவாரூர் மாவட்ட தமுமுக மாணவரணி செயலாளர் )

                            Advertisement

Close