விளம்பரத்துக்கு பிரதமர் மோடியை பயன்படுத்த முடிவு!

இந்திய சுற்றுலாத் துறையின் ’Incredible India’ விளம்பரத்தில் இம்முறை பாலிவுட் நடிகர்களை ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என சுற்றுலாத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த இரண்டு வருட ஆட்சியின் போது சுற்றுலாத்துறை பற்றி பேசிய வீடியோ பதிவுகளை வைத்து விளம்பரம் தயாரித்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க உள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்னும் 45 நாட்களில் ’இன்க்ரெடிபல் இந்தியாவின் புதிய விளம்பரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் இந்திய சுற்றுலாத் துறை பிரச்சார விளம்பரங்களில் அமிதாப் பச்சன், அமீர்கான் உள்ளிட்டோர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Close