பெட்ரோலை 19.40 ரூபாய்க்கு மத்திய அரசு விற்பனை செய்ய கோரிக்கை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ள நிலையில் இந்தியாவில் லிட்டர் பெட்ரோல் ரூ19.40; டீசல் ரூ15.71-க்குதான் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 32 காசு, டீசல் விலை லிட்டருக்கு 85 காசு குறைத்துள்ளன.
அதன் பின்னர் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியது. மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Close