Adirai pirai
posts

திருச்சியில் பயங்கர சாலை விபத்து!

சென்னையில் திருச்சிக்கு இன்று அதிகாலை திருச்சி தேசிய நெடுஞ்சாலை NH45 வழியாக வந்துக்கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று திருச்சி M.A.M. பொறியியல் கல்லூரி அருகே செல்லும் பொது எதிரே சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் முற்றிலுமாக பேருந்து உருக்குலைந்தது. இதில் ஓட்டுனர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் இதில் பலத்த அடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் திருச்சி S.R.M மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து சமயபுரம் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-நூருல் (அதிரை பிறை)

Advertisement