Advertisement

' />

நாட்டை உலுக்கிய கோர நிகழ்வின் மீட்புப் பணிகள் முடிவடைந்தன

நாட்டையே உலுக்கிய நிகழ்வு: சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் தரைமட்டமான விபத்து
மவுலிவாக்கம் மீட்புப்பணிகள் நிறைவு பெற்று. 61 பேர் பலி; 27 உயிருடன் மீட்பு
7 நாட்களாக மீட்புப் பணி
இவர்களை கடந்த 7 நாள்களாக தமிழக தீயணைப்புப் படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில பேரிடர் மீட்புக் குழு, தமிழக காவல்துறையின் கமோண்டோ வீரர்கள், த.மு.மு.க இயக்க்த்தினர், மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஆகியோர் கொண்ட மீட்புக் குழு என மொத்தம் சுமார் 1,500 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இறந்தவர்களில் 41 பேர் ஆண்கள், 20 பெண்கள். இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 25 பேர் ஆந்திரத்தையும், 10 பேர் தமிழகத்தையும், 4 பேர் ஒடிஸாவையும் சேர்ந்தவர்கள்.
அடையாளம் காணப்படாமல் இருக்கும் சடலத்தை அடையாளம் காண வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
நாட்டை அதிர வைத்த இந்த கோர நிகழ்வின் காரணங்கள் ரியல் எஸ்டேட் பண முதலைகளின் பேராசையும், நீர் நிலையில் மேல் 11 மாடி கட்டிடத்தை கட்ட அனுமதி வழங்கிய ஊழல் நிறைந்த. அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளின் பணத்தாசையும் தான்.
தொகுப்பு: காலித் அகமது (அதிரை பிறை)

Advertisement

Close