அதிரை மக்களுக்கு கிடைத்த ரமலான் பரிசு

கடந்த பல நாட்களாக அதிரையை மட்டும் வெயில் கடுமையாக வாட்டி வந்தது. இதனால் ரமலானில் இரண்டு நாட்கள் நோன்பு வைத்துக்கொண்டு மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர்.

கடந்த நாட்களை விட மிகவும் மோசமாக இன்று காலை முதல் வெயில் சூடான அனல் காற்றுடன் அடித்தது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல்  தவித்தனர். இந்நிலையில் தற்பொழுது மக்ரிப் பாங்கு சொல்வதற்க்கு சில நிமிடங்களுக்கு முன்னர் திடீர் என குளிர்ச்சியான மலை காற்றுடன்  வானம் மேகங்கள் சூழ காணப்பட்டது.

இதனை அடுத்து தற்பொழுது சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் தொடர வேண்டும் என்பதே பெரும்பாலான அதிரை வாசிகளின் எதிர்பார்ப்பாகும் 

Advertisement

Close