​ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பான சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி எண்கள்:Help Line!

500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் நோட்டுக்களை வைத்துள்ள பெரும் பணக்காரர்கள் மட்டுமின்றி சாதாரண மக்கள்கூட இந்த அறிவிப்பால் குழம்பி போய் உள்ளனர். 

தங்களிடம் உள்ள நோட்டுகளை எங்கு மாற்றுவது என்ற விழிப்புணர்வு இன்னும் மக்களிடம் சரியாக சென்றடையாத காரணத்தால் அவர்கள் ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சில மையங்களில் பணம் நிரம்பியதால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக ஏற்படும் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பணம் மாற்றுவது தொடர்பாக சந்தேகங்களுக்கு 02222 602201,02222 602944 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச தொலைபேசி எண்கள் இன்று காலை 8 மணி முதல் 15 நாட்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Close