அதிரை நியூஸ் ஆசிரியருக்கு மிரட்டல்! வண்மையாக கண்டிக்கிறது அதிரை பிறை!

அதிரையில் தற்போது செய்திகளை ததருவதற்கான சில இணையதளங்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் நமது சகோதர இணையதளமாகிய அதிரை நியூஸ்.
கடந்த சில நாட்களாக இந்த இணைய தள ஆசிரியரும் தலைமை நிர்வாகியுமான சேக்கன்னா நிஜாம் அவர்களின் பெயரில் யாரோ போலியாக ஜீமெயில் மற்றும் முகநூலில் கணக்கு திறந்து மிரட்டுவதாகவும் அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக பதிவுகள் இடுவதாகவும் அதிரை நியூஸில் பதிந்திருந்தார்….
அப்பதிவு உங்கள் பார்வைக்கு 
“இரண்டு நாட்களுக்கு முன்பு அதிரை நியூஸ் எடிட்டர் மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் ஒன்று வந்தது.
சேக்கனா நிஜாம் பெயரில் போலியாக உருவாக்கிய மின்னஞ்சல் ( sekkanamnijam@gmail.com) முகவரியிலிருந்து “இனி உனக்கு ஆப்பு” என்று தலைப்பிட்டுமிரட்டல் அடங்கிய வாசகங்களை தாங்கி வந்திருந்தது நம்மை அதிர்ச்சியடைய வைத்தது.
இதுகுறித்து சேக்கனா நிஜாமை தொடர்பு கொண்டு விசாரித்ததில்… ‘எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இணையத்தோடு தொடர்புடைய ஒரு சிலர் ஒன்றாக கைகோர்த்துக்கொண்டு எனது பெயரில் நான் பயன்படுத்திவரும் புரபைல் படத்துடன் இதுபோன்ற கீழ்த்தரமான வேளைகளில் இறங்கியிருக்கின்றனர். நேற்றும் இன்றும் அதிரை நியூசில் பதிவிடும் ஒவ்வொரு செய்திகளுக்கும் எனது பெயரில் தமிழிங்கிலிஸ்ல் டைப் செய்யப்பட்ட பின்னூட்டங்களை தொடர்ந்து பதிந்து வருகின்றனர்.
போலியாக எனது ( சேக்கனா நிஜாம் ) பெயரில் பந்திந்த பின்னூட்டங்களை கீழ்கண்ட சுட்டிகளில் சென்று பார்க்கவும் : https://www.adirainews.net/2014/06/bl g-post_8109.html
https://www.adirainews.net/2014/06/blo –
post_6229.html
https://www.adirainews.net/2014/07/11.html
மேலும் எனது பெயரில் போலியாக முகநூல் ( Sakkana Nijam ) கணக்கும் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எனது முகநூல் பக்கத்தில் எனது நண்பர்கள் அறிய வேண்டும் என்பதற்காக “சமூகத்தில் தற்போது சைபர்குற்றம் அதிகரித்து வருகிற வேலையில் நன்கு அறிமுகமானவரின் பெயரில் போலியான முகநூல் ( Facebook ) துவங்கி அதில் தவறான தகவல்கள் தெரிவித்து வருவது அதிகரித்து வருகிறது.
இதில் என்னையும் அவர்கள் ( போலிகள் ) விட்டுவைக்கவில்லை” என்று ஸ்டேட்ஸ்ம் பதிந்துள்ளேன். புனித ரமலான் மாதத்தில் இது போன்ற தரங்கெட்ட செயல்களில் ஈடுபடும் நயவஞ்சக ஆசாமிகள் உண்மையான இஸ்லாமியனாக இருக்கமுடியாது.
ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் இவர்கள் போன்ற போலிகளிடம் எனது நண்பர்கள் – சகோதரர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் விலகி இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். இவற்றை நாம் சாதாரணமாக எடுத்துகொள்ள இயலாது என்பதால், போலிகளிடமிருந்து அதிரை நியூஸுக்கு விடுத்த பகிரங்க மிரட்டலாக கருதவேண்டி இருக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் எந்தவொரு ஆஷாமிகளும் ஈடுபடக்கூடாது என்றும், அதேபோல் எந்தவொரு இணையதளங்களும், சமூக அக்கறை கொண்ட நபர்களும் இதனால் பாதிப்படைய கூடாது என்பதற்காகவும் இதுகுறித்து சைபர் கிரைம் மற்றும் காவல்துறையில் ஏன் புகார் அளிக்ககூடாது ? என கடந்த இரு நாட்களாக அதிரை நியூஸ் குழுவினர் தீவிரமாக பரிசீலித்து வருகின்றோம்.” என்றார். இதை அதிரை பிறையும் வண்மையாக கண்டிக்கிறது.

Advertisement
Close