மோடி அறிவிப்பு எதிரொலி! தங்கம் விலை சவரனுக்கு 1,456 ரூபாய் அதிகரிப்பு!

500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.1,456 உயர்ந்துள்ளது.

கையில் இருக்கும் பணத்தை தங்கமாக மாற்றிக் கொள்ள ஏராளமானோர் நகைக் கடையில் குவிந்து வருவதால் தங்கம் விலை ஒரே நாளில் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று சில்லறை விற்பனையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.182 உயர்ந்து ரூ.3,060க்கு விற்பனையாகிறது.

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,456 உயர்ந்து ரூ.24,450க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.3,166க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து 48.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.910 உயர்ந்து, ரூ.44,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LAST UPDATE TIME:10:35:30 AM

 

Date Standard Gold (22 K)
1 grm. 8 grms.
09/November/2016 3060.00 24480.00
08/November/2016 2878.00 23024.00
07/November/2016 2883.00 23064.00
06/November/2016 2916.00 23328.00
05/November/2016 2916.00 23328.00
04/November/2016 2910.00 23280.00
03/November/2016 2897.00 23176.00
02/November/2016 2902.00 23216.00
01/November/2016 2875.00 23000.00
31/October/2016 2866.00 22928.00

 

Close