அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி

img_7349

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி யார்?, என்பதை தெரிவு செய்வதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

அவர், இதுவரை வெளியான முடிவுகளின் படி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனைக் காட்டிலும் 58 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளார்.

மொத்தமுள்ள 538 தொகுதிகளில் குறைந்தது 270 தொகுதிகளில் வெற்றி பெறுபவர் ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்படுவார். தேர்தல் முடிவுகளின் படி டொனால்ட் ட்ரம்ப் 276 தொகுதிகளிலும், ஹிலாரி கிளிண்டன் 218 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றனர். அதன்பிரகாரம், டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளார்.

Close