சென்னை கட்டிட இடிபாடு மீட்புப் பணியில் களப்பணியாற்றிய த.மு.மு.க வினர்!

 சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் போரூர் முதலிவாக்கத்தில் உள்ள பதினோரு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது நாம் அனைவரும் அறிந்திருப்போம்.
இதில் தமிழ்நாடு, ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 18 பேர் பலியான பறிதாபமும் நிகழ்ந்தது.
இன்னும் மீட்புப் பணிகள் இதில் நடைப்பெற்று வருகிறது. இம்மீட்புப் பணியில் அரசு ஊழியர்களுக்கு உறுதுணையாக தமிழ்நாட்டு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் அள்ளும் பகலும் அயராது உழைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இவர்களின் இத்தன்னார்வ தொண்டை பார்த்து அங்கு வரும் அரசியல் தலைவர்களும் அரசு உயர் அதிகாரிகளும் வெகுவாக பாராட்டி சென்றனர்.
புகைப்படங்கள்: ஷாதுலி (அதிரை த.மு.மு.க)

Advertisement

Close