சவூதிக்கு “ஹவுஸ் டிரைவர்” விசாவில் வரப்போகிறீர்களா? – 02

போர்டிங்கில்_செய்ய_வேண்டியவை 
இதற்குமுன் இந்தியாவில் விசா வாங்கும் விபரத்தையும், அதில் கவனத்தில்கொள்ள வேண்டியதையும்
பார்த்தோம். இப்போது சவூதிக்கு கிளம்பிய பிறகான நிலவரத்தை பார்ப்போம். ஸ்டாம்பிங் அடித்து
டிக்கெட் ஓகேயாகி விமான நிலையம் வந்த பிறகு உங்களுக்கு அத்தியாவசியமானவற்றை மட்டும்
கையில் வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் லக்கேஜில் போட்டு விடுவது அநாவசியமான செக்கிங்
தொந்தரவிலிருந்து தப்பிக்கலாம்.
கேட்_நம்பரும், #லக்கேஜும்
போர்டிங் போட்டதற்கு பிறகு நீங்கள் செல்லவேண்டிய கேட் நம்பர் அதில் இருக்கும். அந்த
கேட்டின் அருகில் அமர்ந்துகொள்ளுங்கள். அது அலைச்சலை மிச்சபடுத்தும். நீங்கள் வேறுநாட்டு
வழியாக விமானம் மாறி செல்லவேண்டியிருந்தால் அதற்கும் சேர்த்தே போர்டிங் பாஸ் தருவார்கள்.
அதிலும் கேட் நம்பர் இருக்கும். சவூதி வரை நீங்கள் கையில் லக்கேஜ் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
அவர்களே நாம் செல்லும் விமானத்தில் மாற்றிவிடுவார்கள்.
பணமாற்றம்_ரியால் மிக முக்கியமான
ஒன்று உங்களின் வழிச் செலவுக்கும், சவூதி இறங்கியபின் உள்ள செலவுக்கும் ரியால் மாற்றிக்கொள்ளவும்.
(உங்கள் ஊரிலேயே ரியால் மாற்றிக் கொண்டால் நல்லது.) ரியால் மாற்ற மறந்து விட்டு வந்திருந்தால்
பரவாயில்லை ஏர்போர்ட்லேயே இந்திய ரூபாயை கொடுத்து உங்களுக்கு தேவைபடும் தொகையை ரியாலாக
மாற்றிக் கொள்ளலாம். ஆனால் நூறு ரூபாய் தாளை தவிர அதற்கு கீழுள்ள ரூபாய்தாள் எவ்வளவு
வைத்திருந்தாலும் ஏர்போர்ட் மணி எக்சேஞ்சில் வாங்க மாட்டார்கள். #வேறுநாட்டு_விமானநிலையத்தில்
அடுத்து நீங்கள் குறைந்த செலவில் டிக்கெட் போட்டதால் வேறு நாட்டு வழியாக செல்ல நேர்ந்து
அந்த நாட்டு ஏர்போர்ட்டில் வெயிட்டிங் நேரம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருந்தால்
(அதிகமான கல்ஃப் கன்ட்ரி ஏர்போர்ட்களில்) பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கபடுகிறது.
அதை விசாரித்து அறிந்துகொள்ளவும். #சவூதி_விமானநிலையத்தில் எல்லாவற்றையும் கடந்து சவூதி
விமான நிலையம் வந்த பிறகு சவூதி உள் நுழைவதற்கான ஒப்புதல் ஸ்டாம்பிங்கிற்கு சவூதி வேலைக்கு
வந்திருக்கும் நபர்களுக்கு தனி வரிசை இருக்கும் அதில் நின்றுகொள்ள வேண்டும். புதிதாக
வருபவர்களுக்கு தனி வரிசையும், பழைய நபர்களுக்கு தனி வரிசையும் இருக்கும் அதை கேட்டு
நின்றுகொள்ளுங்கள். #கைரேகையும்,
கருவிழி_ரேகையும் உங்களின்
வாய்ப்பு வரும்போது அங்கிருக்கும் ஆய்வாளரிடம் உங்கள் பாஸ்போர்ட், விசா அனைத்தையும்
கொடுங்கள் அவர் அதை ஆராய்ந்து உங்களின் பத்து விரல்களின் ரேகையையும், கருவிழியையும்
போட்டோ எடுப்பார். இது நீங்கள் இதற்கு முன் சவூதி வந்தவரா ஏதேனும் குற்றசெயல் புரிந்தவரா
என சோதிப்பதற்கும் அப்படி இல்லையெனில் இதற்கு பிறகான பாதுகாப்பு காரணங்களுக்காகவும்
சவூதி அரசாங்கத்தின் நடவடிக்கை இது. எல்லாம் சரியாக இருந்து அங்குள்ள அதிகாரி ஸ்டாம்பிங்
அடித்துவிட்டால் நீங்கள் சவூதியில் உள் நுழைந்தவராக கருதபடுவீர்கள்.
லக்கேஜ்_எடுக்கும்போது நேராக
சென்று உங்கள் லக்கேஜை எடுத்துகொள்ளுங்கள். அப்படி லக்கேஜ் வரவில்லையென்றால் பதட்டபட
வேண்டாம். ஆட்டோமெட்டிக் இயந்திரத்தில் எடுக்கபடாத அதிக லக்கேஜ் சுற்றிகொண்டிருந்தால்
அதை எடுத்து ஓரமாக வைத்திருப்பார்கள். அங்கு வேலை பார்க்கும் பங்காளியிடம் கேட்டால்
சொல்வார்கள். அதை எடுத்துகொண்டு விமானநிலையத்தை விட்டு வெளியே வாருங்கள். (முற்றும்)
அடுத்த பதிவில் மிக அபாயகரமான ஒரு விஷயத்தை பற்றியும் அதை நாம் சமாளிக்கும் விதத்தையும்
எதில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறேன்.
அன்புடன்

அதிரை_உபயா

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close