அதிரையில் பரபரப்பான விற்பனையில் இஃப்தார் பொருட்கள்

இன்று அதிரையில் மக்கள் ரமலான் முதல் நோன்பை நோற்றுள்ளனர். தற்பொழுது பலரும் இஃப்தாருக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இஃப்தாருக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்க்கு மக்கள் கடைகளுக்கு சென்றவாறு உள்ளனர்.
தற்பொழுது பெரும்பாலான மளிகை கடைகளில் கடற்பாசி, பேரித்தம்பழம், சர்பத் பவுடர், கஸ்டர்ட் பவுடர், பச்சி மாவு, பிசின், ஜிவ்வரிசி, முந்திரி பருப்பு, முட்டை போன்ற பொருட்கள் கடந்த 2 நாட்களாக அதிக அளவில் விற்பனையாவதாக அதிரை சேர்ந்த ஒரு மளிகை கடை உரிமையாளர் தெரிவித்தார்.

Advertisement

Close