உண்ணாவிரதம் இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை முயற்சிக்கு சமமாகும்!

தற்போது தமிழகம் எங்கும் எந்த கோரிக்கையை எடுத்தாலும் உண்ணாவிரதம், மறியல், ஆர்ப்பாட்டம் என அரசியல் கட்சிகள், பொதுமக்கள், சமுதாய அமைப்புகள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உண்ணாவிரதம் என்ற ஒன்று இஸ்லாத்திற்க்கு எதிரானது என்பதை பலரும் அறியாமல் நல்ல நோக்கத்துக்காக பாவத்தில் விழுந்துவிடுகின்றனர்.   நோக்கம் நேரானது என்றாலும் அது நிறைவேறுவதற்க்காகவும் தேர்வு செய்த இந்த வழிமுறை இஸ்லாத்தில் இல்லாதது, இஸ்லாத்திற்கு எதிரானது. 

நாம் உலக விஷயத்தில் உண்ணாமல் இருப்பது என்றால் இரண்டு காரணத்துக்காக இருக்கலாம். 1.உண்ணுவதற்க்கு உணவு இல்லையென்றால் உண்ணாமல் இருக்கலாம். 2.மருத்துவ காரணங்களுக்காக உண்ணாமல் இருக்கலாம். 
ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்காக செய்யப்படுகின்ற இஸ்லாத்தின் கடமையான நோன்பு இருக்கலாம். அதை விட்டு விட்டு ஒரு கோரிக்கை நிறைவேறுவதற்க்காக உண்ணாவிரதம் இருப்பது கூடாது.மேலும் தன்னை தானே வருத்திக் கொள்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளதை நாம் நல்ல நோக்கத்திற்க்காக செய்தாலும் அது பாவமாகிவிடும். மேலும் இந்த உண்ணாவிர போராட்டம் என்பது தற்கொலை முயற்சிக்கு சமமானது என மார்க்க அறிஞர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றால், கோரிக்கை நிறைவேறாது போனால் இப்படியே இறந்து போவேன் என்பது இதன் உள்ளர்த்தம். இது தற்கொலைக்கு சமமாகும். தன்னையே வருத்திக் கொள்ளும் எந்த செயலையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாய் எதிர்க்க தான் செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தடுத்த ஒன்றையும், இஸ்லாத்தில் இல்லாத ஒன்றையும் எந்த காரணத்துகாக செய்தாலும் அது தவறு. எனவே உண்ணாவிரதம் இருப்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close