7வது முறையாக இரத்ததானம் செய்த அதிரை பிறை செய்தியாளர்

இன்று மாலை நமது இணையதளத்தில் பட்டுக்கோட்டை பாலகிருஸ்னா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் மூதாட்டிக்கு O பாசிடிவ் இரத்தம் தேவைபடுவதாக அறிவித்திருந்தோம்.

இதனை ஏற்று நமதூரில் பலர் இரத்ததானம் செய்ய முன்வந்தனர்.
இதில் அதிரை பிறை செய்தியாளர் காலித் அஹ்மது அவர்களும் வந்து இரத்ததானம் செய்தார்.
19 வயது அவரின் 7 வது இரத்ததானம் ஆகும். அதிரை பிறை செய்தியாளர் காலித் அவர்களின் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்.
இது போன்று இரத்ததானத்திலும் பொது சேவையிலும் ஆர்வம் மிக்கவரை செய்தியாளராக கொள்வதில் அதிரை பிறை பெருமிதம் கொள்கிறது.
இது போன்று இளைஞர்கள் இரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்.

Advertisement

Close