அதிரை பீச் பாய்ஸ் & SSMG இணைந்து நடத்திய கால்பந்தாட்ட போட்டியில் அதிரை பீச் பாய்ஸ் அணி வெற்றி !!

            அதிரை பீச் பாய்ஸ் & SSMG ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று [ 21-06-2014 ]  கடற்கரைதெரு விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்றது.
            இன்றைய ஆட்டத்தில் அதிரை பீச் பாய்ஸ் அணியினரும், பட்டுக்கோட்டை அணியினரும் மோதினார்கள் .இதில் அதிரை பீச் பாய்ஸ் அணியின் கோல் மேக்கர் என்று அழைக்கப்படும் ராஜிக் அவர்களின் சிறப்பான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பீச் பாய்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர் .

         நாளைய தினம் முதல் ஆட்டத்தில் பட்டுகோட்டை vs மேலனத்தம் அணியினரும் , இரண்டாம் ஆட்டத்தில் அதிரை SSMG vs மல்லிபட்டினம் அணியினரும் மோத உள்ளனர் .
Close