அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பாக பேரூராட்சிக்கு மனு!

 

அதிரை பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் அவர்களின் பணிகளை செயல் அலுவலர் பொறுப்பில் இருக்கும் நிலையில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் கிடக்கும் குப்பைகளை சரிவர சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால்.

குப்பைகளை விரைந்து அப்புறபடுத்த கோரியும், குளங்களில் நீர் மட்டம் குறைந்து இருக்கும் தருவாயில் நீர் திறப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை சங்க நிர்வாகிகள் முன் வைத்தனர்.

சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு தலைவர் அனஸ் செயலாளர் சலீம் மற்றும் நிர்வாகிகள் பலர் இதில் உடன் இருந்தனர்.

பிறகு மனுவை பெற்று கொண்ட அதிகாரி விரைந்து நடவடிக்கை எடுக்க முழு முயற்சி  எடுப்பதாக சங்க நிர்வாகிகளிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

Close