லைக்குகளுக்காக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை கிழித்து முகநூலில் பதிந்து வரும் நெட்டிசன்கள்

கடந்த 8ந்தேதி இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
இதனால் நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளுக்கு திடீரென பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் அன்றாட வாழ்க்கை நடத்தவே மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர்.

நேற்றும், இன்றும் ஏடிஎம் இயந்திரங்கள் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இன்று முதல் நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலக மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு, பழைய நோட்டுகளுக்கு பதிலாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய நோட்டுக்களை பலர் வங்கிகள் பெற முடியாமல் திணறிய நிலையில் சிலர் இந்த நோட்டுக்களை பெற்று அதனை கிழித்து முகநூலில் பதிந்து வருகிறார்கள். இது முகநூலில் வைரலாகி வருகிறது. இந்த 2000 ரூபாயை ஒரு ஏழையிடம் கொடுத்தால் அவரால் நான்கு நாட்களுக்கு இதனை வைத்து குடும்பத்தை நடத்தமுடியும். இந்த நிலையில் அற்ப முகநூல் லைக் ஷேர்களுக்காக உது போன்று வீணான காரியங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.img_7360

Close