சவூதியில் ஒட்டகத்தினால் 8 பேர் மரணம்

சவூதி அரேபியாவின் அஸிர் பகுதியை சேர்ந்த 11 பேர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

ரிஜால் அல் மே என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே ஒரு பெரிய ஒட்டகம் திடீரென ஓடி வந்திருக்கிறது. டிரைவர் சுதாரித்து பிரேக் பிடித்தும் கார் ஒட்டகத்தின் மீது மோதி நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது.
இதில் ஓட்டுனர் உட்பட 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் டார்ப் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தகவல்-ரியாத் விஷன் 
Close