வளைகுடா நாடுகளில் ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது எப்படி???

NRIகளிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அவர்கள் வாழும் நாடுகளில் இனி மாற்ற முடியாது. இந்தியாவிற்கு வரும்போது அவர்களின் NRO கணக்கில் வரவு வைக்க வேண்டும் ( டிசம்பர் 30,2016க்குள்).

அதைத் தவறினால் அடுத்துவரும் 2017 ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் ரிசர்வ் வங்கிக்கு நேரில் போய் தகுந்த ஆவனங்களை காமித்து அதை புதிய பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

ஏப்ரல் 1, 2017க்கு பிறகு உங்களிடம் இருக்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எங்கேயும் மாற்ற முடியாது. அது வெறும் காகிதமாகவே கருதப்படும்.

அதுவும் கூட NRE / NRI கணக்காக இருந்தால் டெபாசிட் செய்ய முடியாது. NRO கணக்காக தான் இருக்க வேண்டும்.

தெரிந்தவர்கள் யாராவது ஊருக்கு போனால் அவர்களிடம் பணத்தை கொடுத்து உங்களின் NRO கணக்கில் போடுவதுதான் தற்போதிருக்கும் ஒரே வழி. ஒருவர் அதிகபட்சம் 25,000 இந்திய ரூபாய்வரை பணமாக இந்தியாவிற்கு கொண்டுபோக முடியும்

Close