அதிரை 11வது வார்டு மக்களின் ஆர்பாட்டம் எதிரொலி! கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது!

அதிராம்பட்டினம் 11வது வார்டுக்கு உட்பட்ட திலகர் தெருவில் பல வருடங்களாக சுத்தப்படுத்தப்படாமல் இருந்த கால்வாய் இன்று மதியம் 2.00 மணிமுதல் தூர்வாரப்பட்டு வருகிறது. 
இது அப்பகுதி மக்க்ளின் ஆர்பாட்டத்தாலும் வார்டு கவுன்சிலர் அன்சர் கான் அவர்களின் முயற்சியாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வேலைகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது.
இதற்க்கு இடையூறாக இருந்த வீடுகள் மற்றும் கடைகள் ஆகியவற்றின் படிகள் இடிக்கப்பட்டு வருகிறது.
இது போன்று நமதூரின் அனைத்து பகுதிகளிலும் நடவடிக்கை எடுத்தால் அதிரை சிங்கப்பூராக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

-களத்தில் இருந்து 
அதிரை பிறை காலித்,
அதிரை பிறை நூருல்,
அதிரை பிறை ஜுபைர் 

Close