குர்ஆனை கற்பிக்கு இஜாஸா சான்றிதழை பெற்ற 8 வயது சிறுமி மரியா அஸ்லம்!

ஐக்கிய இராச்சியம், லூட்டனில் வசிக்கும் எட்டு வயதான மரியா அஸ்லம் அல்-குர்ஆனைக் கற்பிக்கும் இஜாஸா சான்றிதழைப் பெற்றுள்ளார்.

ஏழு வயதில் அல்-குர்ஆனை மனனம் செய்து முடித்த மரியா தஜ்வீத் முறைப்படி கற்றுக்கொடுக்கும் தகுதியைப் பெற்றுள்ளதோடு தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபல்யம் பெற்று வருவதுடன் இணைய வழியில் அல்-குர்ஆனைக் கற்பிக்கும் பணியிலும் தன்னை ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்தகவலை பிபிசி ஏசியா நெட்வேர்க் வெளிக்கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Close